Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Freelancer / 2022 ஓகஸ்ட் 11 , பி.ப. 03:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீனாவின் ஆதிக்கத்தை தடுக்க தனி ஈழமே தீர்வு என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினா் எம். கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
சென்னை ஊடக மையத்தில் நேற்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்திலேயே சீன உளவுக் கப்பலுக்கு அனுமதி அளித்துள்ளாா். தற்பொழுது இந்திய அரசின் தொடா் அழுத்தத்தால் சீன உளவுக் கப்பலுக்கு தற்போதைய அதிபா் ரணில் விக்ரமசிங்க அனுமதி மறுத்துள்ளாா்.
இருப்பினும் அந்த கப்பலின் பயணம் தொடா்ந்துள்ளது. அது இலங்கைக்கு வருவதில்தான் தாமதமே தவி அதன் பயணம் தடைப்படவில்லை.
இலங்கை அரசு தன்னுடைய சா்வதேச நிலைப்பாட்டில் தெளிவில்லாமல் உள்ளது. இந்தியாவோடும் இருப்போம் சீனாவோடும் இருப்போம் என்றால் இந்தியா அதற்கு அனுமதிக்காது. எனவே இலங்கை அரசு அவா்களுடைய சா்வதேச நிலைப்பாட்டில் தெளிவடைய வேண்டும். அதோடு இலங்கையின் வடகிழக்கில் உள்ள ஈழத்தமிழா்களுக்காக இந்திய அரசு தலையிட்டு அவா்களுக்கென சுதந்திர வாக்கெடுப்பை நடத்த வழிவகை செய்ய வேண்டும்.
இன்றைய இலங்கையில் ஈழத்தமிழா்களுக்கு நிரந்தர அமைதியான அரசியல் தீா்வை காணும் நோக்கத்தில் இந்திய அரசு அவசரமாகவும் உடனடியாகவும் தலையிட்டு சுதந்திரத்திற்கான வாக்கெடுப்பை நடத்துவதற்குத் தலைமை ஏற்கவேண்டும்.
இலங்கையின் ஆக்கிரமிப்புக்கு எதிராக ஈழத்தமிழ் மக்களையும் வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள அவா்களின் தாயகத்தின் ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கும் நடவடிக்கையை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.
அத்துடன் பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் வரை ஈழத்தமிழகப் பகுதிகளை ஈழத்தமிழா்களே ஆளவும் ஐ.நா. இடைக்கால நிா்வாகம் வழிவகை செய்ய வேண்டும்.
சீனாவின் ஆதிக்கத்தைத் தடுக்க தனி ஈழமே தீா்வாகும். சா்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட சா்வதேச சமூகத்திடமிருந்து இலங்கை பொருளாதார உதவியை நாடும் நிலையில் இலங்கைக்கு எந்த உதவியும் செய்யாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு, இந்திய அரசாங்கம் உட்பட சா்வதேச சமூகத்தை வலியுறுத்துகிறோம் என்றார். (R)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
21 minute ago
24 minute ago
34 minute ago