Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை
Editorial / 2022 ஏப்ரல் 24 , பி.ப. 08:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
எரிவாயுடன் கொள்வனவு செய்யப்பட்ட சிலிண்டருடன் சென்றுகொண்டிருந்த ஒருவரை வழிமறித்த சிலர், தங்களை பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் எனக்கூறி, அவரை அச்சுறுத்தி, அவரிடமிருந்த பணம் மற்றும் சிலிண்டரை அபகரித்துச் சென்ற சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
யாழ். கஸ்தூரியார் வீதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில், தப்பிச் சென்ற நால்வரில் ஒருவர், சில மணி நேரத்துக்குள் கைது செய்யப்பட்டார். ஏனைய மூவருக்கும் வலை விரிக்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
சனிக்கிழமை இரவு 9 மணியளவில் இடம்பெற்ற சம்பவத்துக்குப்ப ின்னர், கைது செய்யப்பட்டவரிடமிருந்து எரிவாயு சிலிண்டர் மற்றும் 25 ஆயிரம் ரூபாய் பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவரினால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
கந்தர்மடத்தைச் சேர்ந்த 20 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டார். ஏனைய மூவரையும் கைது செய்ய தேடி வருவதாகப் பொலிஸார் கூறினர்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago