2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

சிறுவன் துஸ்பிரயோகம்: சிறுவர் இல்ல காப்பாளர் கைது

Freelancer   / 2022 நவம்பர் 18 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் அமைந்துள்ள சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் உள்ள 12 வயதுச் சிறுவனை பாலியல் ரீதியில் துன்புறுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சிறுவனிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

இல்லத்தில் காப்பாளராகப் பணியாற்றும் 36 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மன்னாரைச் சேர்ந்தவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள நபரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .