Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Editorial / 2023 மார்ச் 08 , பி.ப. 07:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
யா/சித்தன்கேணி ஸ்ரீ கணேசா வித்தியாலயத்தில் மார்ச் முதலாம் திகதி இரண்டு திறன் வகுப்பறைகள் திறந்துவைக்கப்பட்டன. இவை இப்பாடசாலையில் அமைக்கப்பட்டஐந்தாவது,ஆறாவது திறன் வகுப்பறைகள் ஆகும்.
பாடசாலை அதிபர் பா. பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இத்திறப்பு விழாவில், வடமாகாண கல்வித் திணைக்களத்தின் ஊடாக Right To Read நிறுவனத்தால் வழங்கப்பட்ட ஐந்தாவது திறன் வகுப்பறைளை சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட சங்கானை கோட்டக்கல்விப் பணிப்பாளர் சூ. நோபேட் உதயகுமாரும் இப்பாடசாலையின் பழைய மாணவர்களானபிரம்ம ஸ்ரீ கணநாதசர்மா ஸ்ரீமதி ஷாருஹா (லண்டன்) தம்பதியினரின்முழுமையான நிதிப் பங்களிப்பில்அமைக்கப்பட்டஆறாவது திறன் வகுப்பறையை பிரதமவிருந்தினராக கலந்துகொண்ட வலிகாமம் வலய கல்வி பணிப்பாளர் பொ. ரவிச்சந்திரனும் திறந்துவைத்தார்கள்.
ஆறாவது திறன் வகுப்பறையின் நினைவுப் பலகையை கௌரவ விருந்தினராகக் கலந்துகொண்டவித்தியாலயத்தின் பழைய மாணவரும் லண்டன் கற்பக விநாயகர் ஆலயத்தின் பிரதம குருவுமாகிய சிவஸ்ரீ ச. லம்போதர குமாராசாமி குருக்கள் அமைத்துக் கொடுத்தவர்களின் சார்பில் திரைநீக்கம் செய்துவைத்ததோடு வைபவரீதியாக இயக்கியும் வைத்தார்.
இங்கு கருத்துத்தெரிவித்தபிரதமவிருந்தினர், எமது வலயத்தில் சகலவ குப்புக்களும் திறன் வகுப்பறைகளாகஅமையப் பெற்ற முதலாவது திறன் பாடசாலையாக இப்பாடசாலைதிகழ்கின்றது என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago