2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

சாவகச்சேரி வைத்தியசாலைக்காக அங்கஜன் எடுத்துள்ள நடவடிக்கை

Freelancer   / 2024 ஜூலை 07 , பி.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு தற்காலிக மின்பிறப்பாக்கியை பெற்றுத்தர தயார் என பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அண்மைய நாட்களாக தொடரும் சிக்கல் நிலை தொடர்பில் தொடர்ச்சியாக கவனித்து வருகிறேன்.

வைத்தியசாலையின் விபத்து மற்றும் சத்திர சிகிச்சைகள் பிரிவு உள்ளிட்ட பிரிவுகள் மின்சார மாற்றீடுகள் (Power Backup) இல்லாததாலும், அதற்கான மின்பிறப்பாக்கிகள் வழங்கப்படாத நிலையாலும் மருத்துவ பயன்பாடுகள் அற்ற நிலையில் காணப்படுவதாக கடந்த நாட்களில் அறிய முடிந்தது.

இத்தகைய சூழலில் குறித்த பிரிவுகளை ஆரம்பிப்பதற்கு ஆட்சேபணை தெரிவித்து வைத்தியர்களினால் முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்பை முடிவுக்கு கொண்டுவருவதன் அவசியத்தையும் உணர்ந்து, இவ்விடயம் தொடர்பில் ஆர்வலர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தேன்.

அதன்படி, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு அரசாங்கத்தால் போதிய மின்பிறப்பாக்கி வசதிகள் வழங்கப்படும்வரை,  சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கான மின்பிறப்பாக்கிகளை தற்காலிக ஏற்பாட்டில் பெற்றுக் கொடுக்க அன்பர்கள் சிலர் முன்வந்துள்ளனர்.

இதனூடாக வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை பிரிவுகள் உள்ளிட்டவற்றை இயங்குநிலைக்கு கொண்டுவந்து மக்களுக்கான வைத்திய சேவையை வினைத்திறனுடன் வழங்கமுடியும் என கருதுகிறேன். 

எனவே இது தொடர்பில் வைத்தியசாலையின் தற்போதைய பதில் வைத்திய அத்தியட்சகர் Dr. Ramanathan Archchuna, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr. Ketheswaran Arumugam, வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr. VPSD Pathirana (Saman Pathirana), அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) ஆகியோரின் பதிலுக்காக காத்திருக்கிறேன் என்றார். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X