2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

சம்பவ இடத்திலேயே 35 வயது இளைஞன் பலி

Freelancer   / 2022 ஒக்டோபர் 14 , பி.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். றொசாந்த்

யாழ்ப்பாணம் - நாவாந்துறை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

நாவாந்துறை பகுதியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மோட்டார் சைக்கிள் மற்றும் பட்டா ரக வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் மோட்டார் வாகனத்தில் பயணித்த 35 வயதுடைய இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

பட்டா ரக வாகனத்தை செலுத்திய சாரதி தப்பியோடிய நிலையில், விபத்து சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .