Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Princiya Dixci / 2022 ஜூலை 26 , மு.ப. 07:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த், வி.நிதர்ஷன்
யாழ்., அச்சுவேலியில் வீடொன்றில் திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பிரதேசவாசிகளால் பிடிக்கப்பட்ட இளைஞனிடம் இருந்து சிறிய ரக கத்தி மற்றும் ஓடிக்கோலன் என்பன மீட்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
அச்சுவேலி, பத்தமேனி பகுதியில் வீட்டில் தனியே வசிக்கும் பெண்ணொருவரின் வீட்டு வளாகத்தைத் துப்பரவு செய்யும் பணியில் நேற்று முன்தினம் (24) ஈடுபட்ட குறித்த இளைஞன், வேலை முடிந்து சம்பளத்தையும் வாங்கிக்கொண்டு சென்றுள்ளார்.
அதன் பின்னர் வீட்டில் இருந்த பெறுமதியான இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் காணாமல் போயிருந்தமை தொடர்பில், அயலவர்களிடம் பெண் தெரிவித்துள்ளார்.
வீட்டு வேலை செய்து திரும்பிய இளைஞன் மீதே அனைவருக்கும் சந்தேகம் ஏற்பட்டது. இந்நிலையில், இரவு மீண்டும் அந்த இளைஞன், மேற்படி வீட்டுக்கு வரும் போது, அயலவர்கள் மடக்கிப் பிடித்தனர்.
இளைஞனிடம் விசாரித்த போது , பெண் தனியே வீட்டில் இருப்பதால் அவருக்கு பாதுகாப்பாக இருக்கவே தான் வந்ததாகவும் கையடக்கத் தொலைபேசிகள் தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என்றும் கூறியுள்ளார்.
அதனை அடுத்து இளைஞனை, பரிசோதித்த போது அவரது உடைமையில் இருந்து சிறிய ரக கத்தி மற்றும் ஓடிக்கோலன் உள்ளிட்டவையை மீட்ட பிரதேசவாசிகள், அச்சுவேலி பொலிஸாரிடம் இளைஞனை ஒப்படைத்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
49 minute ago
49 minute ago
1 hours ago