2025 மார்ச் 03, திங்கட்கிழமை

சுதுமலையில் 1600 குளிசைகளுடன் இருவரை கைது

R.Tharaniya   / 2025 மார்ச் 02 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் சுதுமலையில் 1600 போதை மாத்திரைகளுடன் இருவரை கைது செய்துள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இது குறித்து மேலும் தெரியவருவதாவது..

 மானிப்பாய் பொலிசாருக்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைய  மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயந்த குணதிலக வின் வழிகாட்டுதலில் சுதுமலை பகுதிக்கு விரைந்த பொலிசார் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள் இருவரை  வழிமறித்து சோதனையிட்டுள்ளனர்.

இதன் பொழுது இரு வகையை சேர்ந்த  1600 போதை மாத்திரைகளை கைப்பற்றினர். தொடர்ந்து கொக்குவில் பகுதியைச் சேர்ந்த 21 மற்றும் 22 வயது மதிக்கத்தக்க இரண்டு இளைஞர்களை கைது செய்தனர். 

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் சம்பவத்தின் போது கைது செய்யப்பட்டவர்களை மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக பொலிசார் தெரிவித்தனர் .

 

nitharsan vinoth


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .