2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

’சட்டவிரோதங்களை தொண்டர் அணி கட்டுப்படுத்தும்’

Freelancer   / 2023 மார்ச் 03 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.நிதர்ஷன்

சட்டவிரோத  செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்படுவதை விரைவுபடுத்தும் நோக்கில், தொண்டர் அணியை உருவாக்க உள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவித்துள்ளார்.

கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சமகால அரசியல் நிலைவரம் தொடர்பாக நேற்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இதனைத் தெரிவித்தார். 

இதன்போது அவர் மேலும் கூறுகையில், “எமது பிரதேசங்களில் பல்வேறு வகைகளில் பலதரப்பட்ட முறைகேடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை நாளாந்தம் அறியக் கிடைக்கின்றது.

“இவற்றை கட்டப்படுத்த கடலோர காவற்படையினர் செயற்பட்டுவருகின்ற போதிலும், அவர்களுக்கு வலுச்சேர்க்கும் வகையில், இந்த தொண்டர் அணி செயற்படும். 

“அத்துடன், யாழ்.மாவட்டத்தின் சில கிராமங்களில் கஞ்சா மற்றும் ஹெரோய்ன் வியாபாரம், குடிசைத் தொழிலாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பிரதான பாடசாலைகளின் முன்பாக திடீரென தோன்றி மறைகின்ற கச்சான் மற்றும் சிற்றுண்டி வியாபாரிகள் தொடர்பாகவும் அவதானம் செலுத்த வேண்டும் என,
யாழ். மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழு முன்னாயத்த கூட்டத்தில் அதிகாரிகளால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

“இதனடிப்படையில், போதைப்பொருள்  மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் குற்றங்கள்  போன்ற பிரச்சினைகளுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென யாழ். பொலிஸாருக்கு பணித்துள்ளேன்” என்றார். (N)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .