Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 08, செவ்வாய்க்கிழமை
Janu / 2024 ஏப்ரல் 29 , மு.ப. 11:55 - 0 - 64
யாழ்ப்பாணம் , மானிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றில் பாலை மற்றும் முதிரைக் குற்றிகள் சட்ட விரோதமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டில் இருவர் , யாழ். மாவட்ட வனவள பாதுகாப்பு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் .
முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து முதிரை மற்றும் பாலை மர தீராந்திகள் சட்டவிரோதமான முறையில் வெட்டப்பட்டு கொண்டு வரபட்டதாக வனவள பாதுகாப்பு திணைக்களத்திற்கு கிடைத்த தகவலுக்கமைய திணைக்களத்தினர் மற்றும் விசேட அதிரடிப் படையினர் இணைந்து மானிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றை சனிக்கிழமை (27) சோதனையிட்டுள்ளனர்
இதன்போது 30 முதிரை மரகுற்றிகள் மற்றும் 33 பாலை மர தீராந்திகள் மீட்கப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் .
மேலும் , கைது செய்யபட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து, மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரியவந்துள்ளது .
நிதர்ஷன் வினோத்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
2 hours ago
2 hours ago