Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 பெப்ரவரி 01, சனிக்கிழமை
Freelancer / 2022 ஒக்டோபர் 19 , மு.ப. 10:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம் - சங்கானை பகுதியில் நேற்றைய தினம் வீதியால் சென்ற முதியவரை வழிமறித்த இரு வழிப்பறி கொள்ளையர்கள், அந்த முதியவரை கத்தியினால் வெட்டி விட்டு , அவரது ஒன்றரை பவுண் தங்கச் சங்கிலி மற்றும் 15,000 ரூபாய் பணம் என்பவற்றை கொள்ளையடித்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த முதியவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த பகுதியில் வழிப்பறி கொள்ளைகள் அதிகரித்து காணப்படுகிறது..
கடந்த வாரம் சங்கானை பிரதேச செயலக பெண் அபிவிருத்தி உத்தியோகஸ்தர் கடமை முடித்து வீடு திரும்பும் போது , மோட்டார் சைக்கிளில் வந்த வழிப்பறி கொள்ளையர்கள் பெண்ணின் சங்கிலி மற்றும் கைப்பை என்பவற்றை கொள்ளையடித்து சென்று இருந்தனர்.
அதேபோல வங்கியில் பணம் எடுத்து விட்டு வீடு நோக்கி சென்ற முதியவரை பகுதியில் வழிமறித்து, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வழிப்பறி கொள்ளையடித்துள்ளனர்.
குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் , வீட்டார் வெளியே சென்ற நிலையில் வீட்டில் தனியே இருந்த மூதாட்டியிடம் , தம்மை பொலிஸார் என அறிமுகம் செய்து கொண்டு , வீட்டினுள் புகுந்த மூன்று கொள்ளையர்கள் மூதாட்டியின் சங்கிலியை அறுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று இருந்தமை குறிப்பிடத்தக்கது. (R)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
9 hours ago
31 Jan 2025