2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

கோவில் உண்டியலை உடைத்தவர் கைது

Janu   / 2024 மே 27 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம், ஆவரங்கால் சிவன் கோவிலில் உண்டியலை  உடைத்து திருட்டில் ஈடுபட்ட ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (26) இரவு கைது செய்யப்பட்டதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

குறித்த ஆலயத்தில் திருடிவிட்டு மற்றொரு ஆலயத்தில் திருட முற்பட்ட போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து திருடப்பட்ட பணமும் சில பொருட்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

மேலும், இது தொடர்பிலான விசாரணைகளுக்கு பின்னர் சந்தேகநபரை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர் .


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X