2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

கைலாசபதி அரங்கில் மாபெரும் கலைநிகழ்வு

Freelancer   / 2023 பெப்ரவரி 22 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதர்சன் வினோத்

யாழ். பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தால் முன்னெடுக்கப்படும் ‘கலைவாரம்’ நான்கு வருடங்களின் பின்னர், இவ்வருடம் மீள வெகு விமர்சையாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
யாழ், பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களிடையே கலை, கலாசார, பண்பாட்டு, விளையாட்டு திறன்களை ஊக்குவிக்கும்முகமாக, கலைப்பீட மாணவர் ஒன்றியத்தால், 20 வருடங்களுக்கு மேலாக குறித்த நிகழ்வு நிகழ்த்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், இம்முறை கலைவார ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் ஜெயராசா ஜெனீபன் தலைமையில், யாழ். பல்கலைக்கழக பரமேஸ்வரா கோவில் முன்றலில், சமயரீதியான அனுஷ்டானங்களுடன் ஆரம்பமான நிகழ்வு, தமிழர்களின் பூர்வீக கலைகளான மயிலாட்டம், பொம்மலாட்டம், பறையிசை ஆகிய கலை வடிவங்களைத் தாங்கிய வண்ணம், பரமேஸ்வரா சந்தி ஊடாக, தபால் பெட்டி சந்தியை அடைந்து, பின்னர் பல்கலைக்கழக பிரதான மைதானத்தைச் சென்றடைந்தது.

இதன்பொழுது, யாழ். பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் ரகுராம், யாழ். பல்கலைக்கழக பிரதி பதிவாளர் அனுசியா, கலைப்பீட பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தார்கள். 

தொடர்சியாக, ஒருவாரம் மாணவர்களிடையே கலை, கலாசார, பண்பாட்டு விளையாட்டு சார் போட்டிகள் நடத்தப்பட்டு, எதிர்வரும் 23ஆம் திகதி மாலை கைலாசபதி கலையரங்கில் மாபெரும் கலைநிகழ்வு இடம்பெறவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .