2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

கிளிநொச்சியில் எரிபொருள் பங்கீடு ஆராய்வு

Princiya Dixci   / 2022 மார்ச் 16 , பி.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.தமிழ்ச்செல்வன்

கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும்  எரிபொருள் வள பங்கீடு தொடர்பில்  பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் பிரதிநிதியுடன் மாவட்டச் செயலாளர் தலைமையில் கலந்துரையாடல், நேற்று (15) நடைபெற்றது.

வீட்டுப் பாவனைக்கான மண்ணெண்ணெய் விநியோகத்தை வாராந்தம் 5 லீட்டர் வீதம் குடும்ப அட்டை ஊடாக பல்நோக்குக் கூட்டுறவுச் சங்கங்களில் பொதுமக்கள் பெற்றுக் கொள்ளும் வகையில்  ஏற்பாடுகளை முன்னெடுக்க இக்கலந்துரையாடலில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

அத்துடன், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குறிப்பாக விவசாயம், மீன்பிடித்துறைகளுக்கான விநியோகத்தை சம்மந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகளின் உறுதிப்படுத்தலுடன் கூடிய கடிதத்தை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சமர்ப்பித்து பெற்றுக்கொள்ளும் வகையில் ஏற்பாடுகளை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

மேற்படி கலந்துரையாடலில் மாவட்டச் செயலக அதிகாரிகள், பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பிரதிநிதி, பிரதேச செயலாளர்கள் மற்றும் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .