2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

கிணற்றிலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு

Freelancer   / 2022 நவம்பர் 20 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் - மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நவாலி - மூத்தநயினார் ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து இளைஞன் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த நவரத்தினம் சுரேஷ் (வயது 32) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மதுபோதையில் இருந்த அவர் கிணற்றில் விழுந்துள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.

பின்னர் அவரை மீட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .