2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

கால்நடைகளின் மாதிரிகள் தொடர்பில் ஆராய்ச்சி

Freelancer   / 2022 டிசெம்பர் 12 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உயிரிழந்த கால்நடைகளின் மாதிரிகள், மேலதிக பரிசோதனைகளுக்காக பேராதனை கால்நடை வைத்திய ஆராய்ச்சி நிறுவகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் கால்நடை புலனாய்வு அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் பின்னரே மாதிரிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் கால்நடைகள் உயிரிழந்தமைக்கான காரணத்தை கண்டறியும் ஆய்வுகள் ஆரம்பிக்கப்படும் என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், ​வைத்தியர் ஹேமாலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.

கடந்த 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 802 மாடுகளும் 34 எருமை மாடுகளும் 256 ஆடுகளும் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .