2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

காலாவதியான பொருள் விற்ற 12 வியாபாரிகளுக்கு தண்டம்

Freelancer   / 2022 நவம்பர் 30 , பி.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். றொசாந்த்

யாழ்ப்பாணம் மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பலசரக்கு கடைகளில்
காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 12 உரிமையாளர்களுக்கு 3 இலட்சத்து 5
ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்து, யாழ். மேலதிக நீதவான் எஸ்.நளினி, புதன்கிழமை (30)
உத்தரவிட்டார்.

யாழ். நகர் பகுதியில் 06 பலசரக்கு கடைகள், குருநகர் பகுதியில் 05 பலசரக்கு கடைகள் மற்றும்
வண்ணார் பண்ணையில் ஒரு கடை நடத்திய கடைகளின் உரிமையாளர்களுக்கு பொது சுகாதார
பரிசோதகர்களால், யாழ். மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.

குறித்த வழக்கு இன்றைய தினம் புதன்கிழமை விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது,
12 வர்த்தகர்களும் தமக்கு எதிரான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டனர்.

அதனையடுத்து, 12 பேருக்கும் 3 இலட்சத்து 5 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்த மேலதிக நீதவான்,
சான்று பொருட்களாக மன்றில் ஒப்படைக்கப்பட்ட காலாவதியான பொருட்களை அழிக்குமாறும்
உத்தரவிட்டார்.R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .