Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை
Janu / 2024 ஜூன் 24 , பி.ப. 01:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று , மருந்தை உட்கொண்ட பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (23) இடம்பெற்றுள்ளது .
யாழ்ப்பாணம் , சாவற்காட்டு பகுதியை சேர்ந்த 63 வயதுடைய விஜயகுமார் குணராணி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்
குறித்த பெண்ணுக்கு கடந்த 20ஆம் திகதி ஏற்பட்ட திடீர் காய்ச்சல் காரணமாக , 22ஆம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற்று , மருந்தினை பெற்றுக்கொண்டு வீடு திரும்பியுள்ளார்.
பெற்றுக்கொண்ட மருந்தை உட்கொண்ட பின்னர்,ஞாயிற்றுக்கிழமை (23) அன்று குறித்த பெண்ணின் உடல் நிலை மிக மோசமாகி மூச்சுவிட சிரமப்பட்ட நிலையில் , யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார் .
குறித்த பெண்ணின் உடற்கூற்று பரிசோதனைகள் யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டு, மேலதிக பரிசோதனை நடவடிக்கைக்காக மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது
எம்.றொசாந்த்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .