2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

காணியை பெற்றுத் தர கோரி முறைப்பாடு

Niroshini   / 2021 ஜனவரி 25 , பி.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

வேலணை பிரதேச செயலாளர் பிரிவுட்குட்பட்ட ஜே11 - மண்கும்பான் 5ஆம் வட்டாரத்திலுள்ள 15 ஏக்கர் காணியை விடுவிக்குமாறு கோரி, காணி உரிமையாளர்களால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில், இன்று (25) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 30 வருடகாலமாக தனியாருக்குச் சொந்தமான குறித்த 15 ஏக்கர் காணியில், தீவகத்துக்கான கடற்படையின் பிரதான முகாம் அமைக்கப்பட்டு, அக்காணி கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த காணியினை சுவிகரிப்பதற்குரிய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், குறித்த 15 ஏக்கர் காணிகளினதும் உரிமையாளர்கள், தமது காணியைப் பெற்றுத் தருமாறு கோரி, யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக் குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .