Freelancer / 2023 ஜூலை 17 , மு.ப. 11:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிதர்சன் வினோத்
யாழ்.தீவக வலய பாடசாலை ஒன்றில் அதிபரினால் மாணவி ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக திங்கட்கிழமை(17) பாடசாலையில் விசாரணைகளை நடத்தச் சென்று கல்வி அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தீவகம் மண்கும்பான் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கடந்த புதன்கிழமை தரம் 4ல் கல்வி கற்கும் மாணவி ஒருவர் மீது பாடசாலை அதிபர் தாக்கியதாக பெற்றோரினால் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை(16) குறித்த அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இன்று திங்கட்கிழமை(17) தீவக கோட்டக் கல்வி அதிகாரிகள் சிலர் பாடசாலையில் விசாரணைகளை மேற்கொள்ள சென்றிருந்த நிலையில் அங்கு கூடி இருந்த பொதுமக்கள் கல்வி அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரியவருகிறது.
சம்பவம் தொடர்பாக ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவல் அடிப்படையில் பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
3 hours ago
4 hours ago
7 hours ago
14 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
7 hours ago
14 Dec 2025