Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Freelancer / 2023 மார்ச் 10 , பி.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.தமிழ்ச்செல்வன்
கிளிநொச்சி - கரைச்சி பிரதேச சபையின் இறுதிநாள் அமர்வு, இன்று (10) நடைபெற்றது.
இதன்போது, கிளிநொச்சியைச் சேர்ந்த நபரொருவர் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தினார்.
கடந்த ஐந்து வருடங்களாக கரைச்சி பிரதேச சபையின் நிர்வாகத்தில் தான் உட்பட பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தங்களு்ககு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அந்நபர், கடந்த காலங்களிலும் தான் தனியொரு நபராக கரைச்சி பிரதேச சபையின் அநீதிகளுக்கு எதிராக போராடியிருப்பதாகவும் தெரிவித்தார்.
அவர்
இன்றும் தனக்கான நீதி கிடைக்கவில்லை என்றும் அவர் கவலை தெரிவித்தார்.
“பிரான்ஸின் துயரம் சாய்ந்த கோபுரம்”, “சீனாவின் துயரம் குவாங்கோ நதி”, “இந்தியாவின் துயரம் கூவம் ஆறு”, “கிளிநொச்சியின் துயரம் கரைச்சி பிரதேச சபை”, “ஜேர்மனியின் கொடூர ஆட்சியாளன் கிட்லர்”, “உகண்டாவின் கொடூர ஆட்சியாளன் இடியமீன்”, “கிளிநொச்சி பிரதேச சபையின் கொடூர ஆட்சியாளன் வேழமாலிகிதன்” என எழுதப்பட்ட பதாயையை சைக்கிள் ஒன்றில் கட்டியவாறு, கரைச்சி பிரதேச சபையின் முற்றத்தில் தனது எதிர்ப்புப் போராட்டத்தை அந்நபர் மேற்கொண்டார். (N)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago