Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2023 ஜூலை 31 , மு.ப. 11:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
மானிப்பாய் நகர்பகுதியில் சட்டவிரோதமான முறையில் நான்கு கடலாமைகளை வாகனத்தில் கொண்டு சென்ற இருவரை திங்கட்கிழமை(31) கைது செய்துள்ளதாக மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
மானிப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய பட்டாரக வாகனமொன்றை வழிமறித்த நிலையில் சந்தேகத்திற்கிடமாக வாகனத்தின் பின்புறம் சாக்கினால் கட்டப்பட்டிருந்த மூட்டைகளை சோதனையிட்டு 4 கடலாமைகளை உயிருடன் மீட்டுள்ளனர்.
இதனையடுத்து 47 மற்றும் 32 வயதான கொழும்புத்துறை மற்றும் இளவாலை பகுதியை சேர்ந்த இருவரை கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில் இளவாலை கீரிமலை கடற்பரப்பில் சட்டவிரதமாக பிடிக்கப்பட்ட ஆமைகளை குருநகர் பகுதிக்கு விற்பனைக்கு கொண்டு சென்றதாக தெரியவந்துள்ளது.
நிதர்சன் வினோத், பு.கஜிந்தன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
13 minute ago
40 minute ago
52 minute ago