2024 டிசெம்பர் 03, செவ்வாய்க்கிழமை

கஞ்சா கடத்தியவர் டிப்பருடன் கைது

Mayu   / 2024 ஜூலை 28 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

யாழ்ப்பாணத்தில் இருந்து டிப்பர் வாகனத்தில் கஞ்சா போதைப்பொருளை கடத்தி சென்ற நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி பூநகரி பகுதியை நோக்கி பயணித்த டிப்பர் வாகனத்தை சங்குப்பிட்டி பாலத்துக்கு அருகில் பொலிஸார் சனிக்கிழமை (27) வழிமறித்து சோதனையிட்டபோது வாகனத்தினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 20 கிலோ 485 கிராம் கஞ்சா போதைப்பொருளை பொலிஸாரால் மீட்கப்பட்டது.

அதனையடுத்து டிப்பர் வாகன சாரதியை கைது செய்யப்பட்டதோடு கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிப்பர் வாகனம் , மீட்கப்பட்ட கஞ்சா போதைப்பொருள் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .