Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை
Freelancer / 2022 ஜூன் 06 , பி.ப. 02:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
என்.ராஜ்
கச்சதீவு என்பது மீனவர்களின் பிரச்சினையோ, தனி மனித பிரச்சினையோ அல்ல, அது எமது நாட்டிலுள்ள வளம் மிக்க ஒரு தீவு.
எமது நாட்டில் உள்ள ஒரு தீவை கையகப்படுத்துவதை, சூறையாடுவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என அகில இலங்கை தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் வீ,சுப்பிரமணியம் தெரிவித்தார்.
இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
தற்போதுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில் இந்தியாவிடம் கையேந்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் எமது தொப்புள்கொடி உறவான இந்திய தமிழ்நாடு அரசு எமக்கு உதவி செய்வதுபோல் உதவி செய்து, பொருட்களை அன்பளிப்பாகக் கொடுத்து விட்டு அந்த சந்தர்ப்பத்தில் கச்சதீவு பிரச்சினையை ஒரு முக்கியமாக எடுத்துக் கொண்டு இருப்பது கோபத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது
மோடி தமிழகத்திற்கு வந்தபோது தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் “கச்சதீவை பெறுவதற்கு இது தகுந்த தருணம்” என்று கூறியிருந்தார்.
இதை ஒருபோதும் ஏற்க முடியாது. அது மோசமான முடிவாகும்.
பிரித்தானிய அரசாங்கம் இரண்டு நாட்டுக்கும் சுதந்திரத்தைக் கொடுத்து விட்டு வெளியே செல்லும்போது கச்சதீவு இடைநடுவில் யாருக்கென்று தெரியாத தீவாக இருந்தது.
அந்த நேரத்திலே இந்தியாவும் இலங்கையும் அதற்கு உரிமை கோரியது. இறுதியாக இலங்கைக்கு இந்தியாவால் கையளிக்கப்பட்டது. இந்தியாவால் இலங்கைக்கு கொடையாக கையளிக்கப்பட்டது தான் கச்சதீவு.
கச்சதீவு என்பது மீனவர்களுக்கான பிரச்சனையல்ல. இரு நாடுகளுக்குமிடையிலான பிரச்சனை என்றார். (R)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
25 Apr 2025
25 Apr 2025