2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

ஓர் ஆரோக்கியமான வீடு

Freelancer   / 2023 மார்ச் 09 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் நடைமுறைப்படுத்தப்படும் "ஓர் ஆரோக்கியமான வீடு : சமூக உற்பத்தித் திறன் ஊக்குவிப்பு” எனும் திட்டத்தின் அறிமுகக் கலந்துரையாடல், கிளிநொச்சி  மாவட்டச் செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில், மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (08)  நடைபெற்றது. 

இதன்போது உற்பத்தித் திறன் பிரிவின் மாவட்ட இணைப்பாளரால் குறித்த திட்டம் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலர் பிரிவுகளிலும் குறித்த திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் வழிவகைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டன.

கிளிநொச்சி மாவட்டத்தில் இதற்காக 1,920 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. 

இது தொடர்பில் மாவட்டச் செயலாளர்  ரூபவதி கருத்துரைக்கையில், “உற்பத்தித் திறன் செயற்பாடுகள் இதுவரை காலமும் அலுவலக மட்டங்களில் பரவலாக முன்னெடுக்கப்பட்டிருந்தன. அடுத்துவரும் காலங்களில் பொதுமக்கள் தமது வீடுகளிலும் உற்பத்தித் திறன் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு இச்செயற்றிட்டம் வழி வகுக்குறது.

“எனவே, இதனூடாக உற்பத்தித் திறன் செயல்பாடுகள் மற்றும் நன்மைகள் சாதாரண பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டும். அதனூடாக அவர்கள் உச்ச பயனை பெறவேண்டும்.

“இதற்காக குறித்த செயற்றத்துடன் தொடர்புடைய உத்தியோகத்தர்கள் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும்” என்றார். (N)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .