2024 நவம்பர் 21, வியாழக்கிழமை

“ஊடகவியலாளர்களை அடைப்பேன்”: ஓ.ஐ.சி எச்சரிக்கை

Editorial   / 2024 ஜூலை 18 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதர்ஷன் வினோத்

 யாழில் செய்திசேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களை சிறையில் அடைப்பேன் என சாவாகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மிரட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சாவகச்சேரி நீதிமன்ற உத்தரவுக்கு அமைய வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா, புதன்கிழமை (17) காலை சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு வாக்குமூலம் வழங்க சென்றிந்தார்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் செய்தி அறிக்கையிட ஊடகவியாளர்கள் மற்றும் சமூக ஊடக செயற்பட்டாளர்கள் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக ஒன்று கூடினர்.

  அங்கு கூடிய ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஊடக செயற்பாட்டாளர்களை பொலிஸ் நிலையத்திற்குள் வருமாறு அழைத்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குறித்த செய்தி அறிக்கையிடலில் ஈடுபட வேண்டாம் என எச்சரித்ததுடன் வைத்தியர் அர்ச்சுனாவிடம் எந்தவொரு நேர்காணலும் எடுக்ககூடாது எனவும் கூறியுள்ளார்.

உத்தரவை மீறி நீங்கள் செய்தி அறிக்கையிடலில் ஈடுபட்டால் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக ஒன்றுகூடினீர்கள் என்று குற்றம்சாட்டி உங்களை சிறையிலடைப்பேன் என மிரட்டியுள்ளார்.

அங்கு செய்தி சேகரிப்பு பணியில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து சென்றிருந்தனர். இவ்வாறு ஊடகவியலாளர்களை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அச்சுறுத்தியமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியதுடன் ஊடக அமைப்புகளிடமும் முறையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X