2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

உழவு இயந்திரம் மின் கம்பத்துடன் மோதி குடும்பஸ்தர் பலி

Freelancer   / 2022 செப்டெம்பர் 14 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட முத்தையன் கட்டுப்பகுதியில் உழவு இயந்திரம் ஒன்று வேகக்கட்டுப்பாட்டினை இழந்து விபத்திற்குள்ளானதில் பெரியசாமி ராஜ்குமார் (32) என்ற குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் முத்தையன்கட்டு எல் வி சந்திப்பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.  

வேகக்கட்டுப்பாட்டினை இழந்த உழவு இயந்திரம் மின் கம்பத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

இதன்போது காயமடைந்த சாரதி மக்களால் மீட்கப்பட்டு ஒட்டுசுட்டான் மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட  மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைபெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காத நிலையில் இன்று மாலை உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பான விசாரணையினை ஒட்டிசுட்டான் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .