Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை
Princiya Dixci / 2022 மே 29 , பி.ப. 12:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.தில்லைநாதன்
யாழ். மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தின் முன்னாள் தலைவரும் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளை தேடி அறிவதற்கான போராட்டத்தை 2015ஆம் ஆண்டு ஆரம்பித்தவருமான திருமதி மேரி பற்றிமா புஸ்பராணி, இன்று (29) அதிகாலை மரணித்துள்ளார்.
இவர் யுத்தத்தில் ஒரு மகனை இழந்த நிலையில், இன்னொரு மகன் காணாமல் போயிருந்த நிலையில் கடந்த 13 ஆண்டுகளாக தேடி அலைந்துள்ளார்.
இந்நிலையில், இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் மாரடைப்புக் காரணமாக சாவகச்சேரி வைத்தியசாலைக்பு கொண்டு செல்லப்பட்ட மேரி பற்றிமா புஸ்பராணி அங்கு மரணித்துள்ளார்.
வடக்கு, கிழக்கில் தமது கணவன், மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளிட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடித்தேடி நோய்வாய்பட்டு, இதுவரை 115 உறவுகள் மரணித்துள்ளனர்.
அந்த வரிசையில், வடமராட்சி கிழக்கு தாளையடியைச் சேர்ந்த மேரி பற்றிமா புஷ்பராணியின் மரணமும் இடம்பெற்றிருக்கின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
25 Apr 2025
25 Apr 2025