2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

உறங்கும் பெட்டியில் தள்ளாடியவர் கைது

Editorial   / 2022 நவம்பர் 07 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி  ஞாயிற்றுக்கிழமை (06) பயணித்துக்கொண்டிருந்த இரவு தபால் ரயிலின் உறங்கும் பெட்டிக்கு பொறுப்பாகவிருந்த ரயில் பணியாளர், மதுபோதையில் இருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அனுராதபுரம் ரயில் பாதுகாப்பு இராணுவத்தால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த ரயிலின் பிரதான கட்டுப்பாட்டாளர் அனுராதபுரம் ரயில் நிலைய கட்டுப்பாட்டு காரியாலயத்துக்கு அறிவித்ததன் பிரகாரம் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  கைது செய்யும் போது அவரிடம் மதுபானம் நாற்றம் வீசியுள்ளது.

கைது செய்யப்பட்டவர் அனுராதபுரம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரை அனுராதபுரம் நீதிமன்ற வைத்தியரிடம் ஆஜர்படுத்தி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது மதுபானம் அருந்தியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

அவர் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ரயில் திணைக்களம் முன்னெடுத்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .