Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Freelancer / 2022 ஜூன் 24 , மு.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
22.05.2022 ஆம் திகதியன்று நல்லூர் பிரதேச சபையின், மாதாந்த அமர்வின்போது சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக கூறப்பட்டு ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்தி உண்மைக்கு புறம்பானதென குறித்த பிரதேச சபையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் பிரதிநிதித்துவம் செய்யும் உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர்.
வடக்கு கிழக்கில் இடம்பெற்ற படுகொலைகள் உண்மையில் இனப்படுகொலைதான் என்பதை நல்லூர் பிரதேச சபையின் அனைத்து உறுப்பினர்களும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டு அதனை தீர்மானமாக நிறைவேற்றியிருந்ததாக ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தன.
குறித்த தீர்மானமானது ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றும் இந்த தீர்மானத்தை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் பிரதிநிதித்துவம் செய்யும் நான்கு உறுப்பினர்களும் தெரிவித்துள்ளனர். இவ்விடயத்தில் தமக்கு எதுவித தொடர்பும் கிடையாது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
47 minute ago
4 hours ago