Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 19, சனிக்கிழமை
Freelancer / 2024 ஜனவரி 26 , மு.ப. 10:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த பின்னர் வீடு திரும்பிக்கொண்டிருந்த இளைஞனை வீதியில் வழி மறித்து வன்முறை கும்பல் வாள் வெட்டு தாக்குதலை நடாத்தியுள்ளது.
யாழ்ப்பாணம் - வடமராட்சி பகுதியை சேர்ந்த ஜெயக்கொடி கார்திபன் (வயது 30) எனும் இளைஞனே தாக்குதலுக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன் மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள், ஐஸ்கிறீம் வாங்குவது போல பாசாங்கு செய்து, இளைஞனின் உடைமையில் இருந்த விற்பனை பணம், மற்றும் கைபேசி என்பவற்றை கொள்ளையடித்துச் சென்று இருந்தனர்.
இது தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் இளைஞன் முறைப்பாடு செய்த பின்னர் தனது வீடு நோக்கி சென்று கொண்டிருந்த வேளை, அல்வாய் பகுதியில் இளைஞனை வழிமறித்த கும்பல் ஒன்று, வாள் வெட்டு தாக்குதலை நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளது.
வாள் வெட்டுக்கு இலக்கான இளைஞன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் , நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
6 hours ago