2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

இளைஞனை வீதியில் துரத்தித் துரத்தி வெட்டிய கும்பல்

Princiya Dixci   / 2022 செப்டெம்பர் 19 , பி.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம் - நவாலி பகுதியில் இளைஞன் ஒருவர் மீது சரமாரியாக வாள் வெட்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கோண்டாவில் கிழக்கை சேர்ந்த ச. துசாளன் (வயது 18) எனும் இளைஞன் மீதே வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நவாலி கிழக்கு பகுதியில் உள்ள நண்பனின் பிறந்தநாளுக்கு நேற்று (18) இரவு சென்று விட்டு, வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளை, நவாலி சம்பந்தப் பிள்ளையார் கோவிலுக்கு அருகில் இரு மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கொண்ட குழு, வாள் வெட்டை மேற்கொண்டுள்ளது.

வன்முறை கும்பலின் தாக்குதலில் இருந்து தப்பிக்கொள்வதற்காக இளைஞன் வீதியில் ஓடிய போதிலும் துரத்தித் துரத்தி சரமாரியாக வாள் வெட்டை மேற்கொண்டு விட்டு, வன்முறை கும்பல் அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளது.

தாக்குதலுக்கு இலக்கான இளைஞனை, அவ்விடத்தில் நின்றவர்கள் மீட்டு , யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .