2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

இராணுவ வீரருக்கு எமனாக வந்த பிக்கப் வாகனம்

Freelancer   / 2022 ஜூன் 22 , பி.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன் 

வவுனியா - ஈரப்பெரியகுளம் பகுதியில் பேருந்தில் இருந்து இறங்கி வீதியை கடக்க முற்பட்ட இராணுவ வீரர் மீது பிக்கப் வாகனம் மோதியதில் குறித்த இராணுவ வீரர் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை இடம்பெற்ற இவ் விபத்து சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

முல்லைத்தீவு பகுதியில் உள்ள இராணுவ முகாம் ஒன்றில் பணியாற்றும் இராணுவ வீரர் ஒருவர் விடுமுறையில் வீடு சென்று, மீண்டும் கடமைக்கு திரும்பியிருந்தார்.

இதன்போது வவுனியா, ஈரப்பெரியகுளம் பகுதியில் உள்ள இராணுவ முகாமில் ஆவணம் ஒன்றை ஒப்படைப்பதற்காக பேருந்தில் இருந்து இறங்கி வீதியை கடக்க முற்பட்ட போது எதிர் திசையில் வந்த பிக்கப் வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து இராணுவ வீரை மோதியதில், குறித்த இராணுவ வீரர் 7 மீற்றர் தூரம் தூக்கி வீசப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு முன்னரே இறந்து விட்டடதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து தொடர்பில் ஈரப்பெரியகுளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சீ.ஐ.சீ.பண்டார தலைமையில் ஈரப்பெரியகுளம் போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி டீ.சீ.எல்.ஜெயவர்த்தன தலையில் பொலிஸார்  மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .