2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

இந்திய மீனவர்களுக்கு 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 18 மாத சிறை

Shanmugan Murugavel   / 2022 மார்ச் 23 , பி.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம். றொசாந்த்
 
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 22 தமிழ்நாட்டு மீனவர்களுக்கு 18 மாத சிறைத்தண்டனை விதித்து , அதனை 10 வருடங்களுக்கு ஒத்திவைத்து ஊர்காவற்துறை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
 
யாழ்ப்பாணம் - காரைநகர்  கடற்பரப்பில் மீன்பிடித்து கொண்டிருந்த காரைக்கால் மற்றும்  நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 22 மீனவர்களையும் இரண்டு விசைப்படகுகளையும்  கடற்படையினர் கடந்த மாதம் 24 ஆம் திகதி கைது செய்து யாழ்ப்பாணம் - மயிலிட்டி மீன் பிடி துறைமுகத்திற்கு அழைத்துச்சென்றனர்.
 
அதனையடுத்து மீனவர்கள் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் சட்ட நடவடிக்கைக்காக  கையளிக்கப்பட்டு ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட போது குறித்த மீனவர்களை மார்ச் மாதம் 10 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்மாறு நீதவான் உத்தரவிட்டார்.
 
இதையடுத்து கடந்த மார்ச் மாதம் 10 ஆம் மீன்டும் வழக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது 22 மீனவர்களையும் மார்ச் மாதம் 23 ஆம் திகதிவரை யாழ்ப்பாணம்  சிறையில் விளக்கமறியலில் வைக்மாறு நீதவான் உத்தரவிட்டார்.
 
இந்த நிலையில் இன்று மீண்டும் குறித்த வழக்கு மன்றில் எடுத்துக்கொண்ட போது ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் மீனவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர்.
 
இதன் போது கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளால் சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. 
 
இலங்கை எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டமை,  நீரியல் பணிப்பாளர் நாயகத்தின் அனுமதிப்பத்திரமின்றி மீன்பிடியில் ஈடுபட்டமை,  மற்றும் தடைசெய்யப்பட்ட இழுவைமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டமை ஆகிய  குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டது. 
 
வழக்கை விசாரித்த நீதவான் குறித்த குற்றச் சாட்டுக்களுக்கும் தலா ஆறு மாதம் சதாரண சிறைத் தண்டணை விதித்து அதனை  10 வருடங்களுக்கு ஒத்தி வைத்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .