2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

‘இணைத்தலைவர்களிடம் திகதி கோரியே ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்’

Shanmugan Murugavel   / 2022 மார்ச் 11 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ். நிதர்ஷன்

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டமானது, அதன் இணைத் தலைவர்களிடம் திகதி கோரப்பட்டு, வழமைபோன்று கூட்டப்படும் என மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தை கூட்டுமாறு, அந்தக் குழுவின் பிரதமரின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள கீத்நாத் காசிலிங்கம், மகேசனுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

பிரதமரின் இணைப்புச் செயலாளர் என்ற அடிப்படையில், அவர் இவ்வாறானதொரு கடிதத்தை அனுப்பியுள்ளார் எனத் தாம் கருதுவதாகவும் மகேசன் குறிப்பிட்டார்.

எவ்வாறிருப்பினும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்களான வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் ஆகியோரிடம் திகதி கோரப்பட்டு, அதற்கமைவே வழமைபோன்று கூட்டத்தைக் கூட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மகேசன் குறிப்பிட்டார்.

அதேநேரம், கூட்டம் தொடர்பான அழைப்பிதழ், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதமரின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள கீத்நாத் காசிலிங்கத்துக்கும் அனுப்பப்படும் என்றும் மகேசன் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .