Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Simrith / 2023 நவம்பர் 22 , மு.ப. 10:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
அண்மையில் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டைப் பொலிஸ் காவலில் இருந்த 26 வயதுடைய இளைஞன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஒரு வீட்டில் இருந்து 90,000 ரூபாய் பணம் மற்றும் 16 ½ பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் குறித்த நபரும் மற்றுமொரு சந்தேக நபரும் இந்த மாத தொடக்கத்தில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் கடந்த நவம்பர் 11ஆம் திகதி நாககேணி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் நவம்பர் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர் சிறையில் இருந்தபோது திடீரென சுகவீனமடைந்து சிகிச்சை பெற்று மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்ட நிலையில், மீண்டும் நோய்வாய்ப்பட்டு நவம்பர் 19ஆம் திகதி யாழ்ப்பாணம் வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இளைஞரின் மரணம் தொடர்பில் யாழ்ப்பாணம் சிறைச்சாலை அதிகாரியொருவர் யாழ்ப்பாணம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த இளைஞன் தாக்குதலுக்கு உள்ளான காயங்களினால் சிறுநீரகம் செயலிழந்து உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியின் பிரேதப் பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளைஞரின் மரணம் தொடர்பில் பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் யாழ்ப்பாணப் பொலிஸ் உயர் அதிகாரிகள் அடங்கிய குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இது தொடர்பில் குற்றமிழைத்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், குற்றவாளிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
7 hours ago
7 hours ago