2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

அரசின் நிகழ்ச்சித் திட்டத்துக்கு அமைய நெல் கொள்வனவு

Freelancer   / 2023 மார்ச் 01 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன் 

அரசின் நெல்கொள்வனவு நிகழ்ச்சித்  திட்டத்துக்கு அமைய நெல் கொள்வனவு இடத்தை திறந்து வைத்தல் மற்றும் விவசாயிகளிடம் நெல் கொள்வனவு செய்தல் நிகழ்வுகள்,   புதுக்குடியிருப்பு 2ஆம் வட்டாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீராஜன் அரிசி ஆலையிலும் உடையார்கட்டு பகுதியில் அமைந்துள்ள கருமாரி அரிசி ஆலையிலும் நேற்று முன்தினம் (27)  நடைபெற்றன.

இதில் கலந்துகொண்ட மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் நெல் கொள்வனவு இடத்தை திறந்துவைத்து, விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவை ஆரம்பித்து வைத்தார்.

அரசின் நெல் கொள்வனவு திட்டத்துக்கு அமைய முல்லைத்தீவு மாவட்டத்துக்கு 100 மில்லியன் ரூபாயட நிதி ஒதுக்கீடு  செய்யப்பட்டுள்ளது. 

இதன் பிரதான நோக்கம் முல்லைத்தீவு மாவட்டத்தில் மிகவும் வறுமையில் உள்ள மக்களுக்கு அரிசியை இலவசமாக வழங்குவதாகும்.

இந்த நெல் கொள்வனவானது நேரடியாக பிரதேச செயலகத்தால் முன்னெடுக்கப்படுவதோடு, களஞ்சியப்படுத்தபடவும் உள்ளது. பிரதேச செயலாளருக்கும் நடுத்தர மற்றும் சிறிய ஆலை உரிமையாளருக்கம் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

அதாவது 1kg பச்சை நெல்லை அரிசியாக்குவதற்கு 7.00 ரூபாயும், அவியல் நெல் 1kg அரிசியாக்குவதற்கு 9 ரூபாய் 50 சதமும் அரிசி ஆலை உரிமையாளருக்கு வழங்குவதோடு, 10kg அரிசி பைக்கெற் ஒன்றுக்கு 50 ரூபாயும் மட்டுமே ஆலை உரிமையாளருக்கு வழங்கப்படும்.

இந்த 10kg அரிசி பொதியானது முல்லைத்தீவு மாவட்டத்தில் மிகவும் வறுமையில் வாழும் தெரிவுசெய்யப்பட்ட பயனாளர்களுக்கு பங்குனி மாதம் 10kg, சித்திரை மாதம் 10kg என்ற அடிப்படையில் இலவசமாக அரசாங்கத்தால் வழங்கப்படவுள்ளது. (N)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .