2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

அன்றாட உணவுக்கே கஷ்டப்படும் மாவடியம்மன் மக்களின் நிலை

Princiya Dixci   / 2022 ஓகஸ்ட் 24 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி  - இராமநாதபுரம் பிரதேசத்துக்குட்பட்ட மாவடியம்மன் புதிய குடியிருப்பில் வாழ்ந்து வரும் 38 வரையான  குடும்பங்கள், தொழில் வாய்ப்புகள் இல்லாத நிலையில், அன்றாட அன்றாட உணவுக்கே கஷ்டப்படுகின்றனர்.

அதேநேரம்,  குடிநீர், நிரந்தர வீட்டு, மின்சார வசதியின்மைகளுக்கு மத்தியில்,  காட்டு யானைகள், கரடி உள்ளிட்ட காட்டு விலங்குகளின் அச்சுறுத்தல் ஆகியவற்றுக்கு மத்தியிலும் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாவடியம்மன் புதுக்காடு புதிய குடியிருப்பில் 38 வகையான குடும்பங்கள் தற்போது குடியேறியுள்ளன.

 குறித்த பிரதேசத்தில் இருந்து கூலி  வேலைக்குச் செல்வதாக இருந்தாலும் மிக நீண்ட தூரத்துக்கு செல்ல வேண்டும். அவ்வாறு சென்றாலும் கூலி வேலைகளும் இல்லை என்றும் தெரிவித்துள்ளதுடன், பெண் தலைமைத்துவ குடும்பங்களும்  பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக சுட்டிக்காட்டுகின்றனர்.

அதுமட்டுமல்லாது,  இந்த பிரதேசத்தில் உள்ள மக்களினுடைய குடிநீர் தேவைகளுக்காக மூன்று குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டிருக்கின்ற போதும் அதில் இரண்டு கிணறுகள் பழுதடைநிலையில் காணப்படுகின்றன. குறித்த ஒரே ஒரு கிணற்றில் இருந்து 38 குடும்பங்களும்  பெரும் நெருக்கடிகளுக்கு மத்தியில் தமக்கான குடிநீர் பெற்று வருகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .