2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

அனுமதிப்பத்திரங்களில் மோசடி; டிப்பர் சாரதிகள் எண்மர் கைது

Princiya Dixci   / 2022 செப்டெம்பர் 06 , பி.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.நிதர்ஷன்

அனுமதிப் பத்திரங்களில்  மோசடி செய்து மணல் ஏற்றிச் சென்ற எட்டு டிப்பர் வாகனங்களை சாவகச்சேரி பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன், அதன் சாரதிகள் எண்மரையும் கைது செய்துள்ளனர்.

இன்று செவ்வாய்க்கிழமை (06) காலை, யாழ்ப்பாணம் - கண்டி வீதியூடாக யாழ்ப்பாணம் நோக்கி மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனங்களை கைதடி பகுதியில் வைத்து சாவகச்சேரி பொலிஸார் சோதனையிட்டபோதே, இந்த மோசடி தெரிய வந்தது.

அதனை அடுத்து குறித்த டிப்பர் வாகனங்களை கைப்பற்றிய சாவகச்சேரி பொலிஸார், அனுமதிப் பத்திரங்களில் மோசடி செய்த குற்றத்தில் சாரதிகளை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சாரதிகளையும், கைப்பற்றப்பட்ட டிப்பர் வாகனங்களையும் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .