2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

அதீத வெப்பத்தால் மற்றுமொருவர் உயிரிழப்பு

Editorial   / 2024 மே 10 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

 யாழ்ப்பாணத்தில் நிலவும் அதீத வெப்பம் காரணமாக மற்றுமொருவர்  உயிரிழந்துள்ளார்.  புன்னாலைக்கட்டுவன் தெற்கை சேர்ந்த சிவஞானம் ஜெயக்குமார் (வயது 47) என்பவரே உயிரிழந்துள்ளார். 

குறித்த நபர்   வியாழக்கிழமை (09) வீட்டில் தனித்திருந்த போது , வீட்டின் பின் பகுதிக்கு சென்ற வேளை திடீரென மயக்கம் ஏற்பட்டு விழுந்துள்ளார். 

சுமார் 04 மணி நேரத்தின் பின்னர் அவரது குடும்பத்தினர் வீடு திரும்பி, வீட்டில் இருந்தவரை காணவில்லை என தேடிய போது , வீட்டின் பின் முற்றத்தில் கடும் வெய்யிலுக்குள் விழுந்து கிடந்ததை கண்ணுற்று அவரை மீட்டு , தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். 

வைத்தியசாலையில் அனுமதித்த போது அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டார் என வைத்தியர்கள் அறிக்கையிட்டனர். 

உடலில் வெப்ப கொப்பளங்கள் காணப்பட்டதாகவும் , அவரது உயிரிழப்புக்கு அதிக வெப்பமே காரணம் என உடற்கூற்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்.போதனா வைத்தியசாலையில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது , யாழ்.போதனாவில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில்  "ஹீட் ஸ்ரோக்" ஏற்பட்டு அண்மைய நாட்களில் ஐவர் உயிரிழந்துள்ளதாக பொது வைத்திய நிபுணர் ரி. பேரின்பராஜா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X