2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

அதிகாலையில் துணிகர திருட்டு

Freelancer   / 2022 ஒக்டோபர் 17 , மு.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதர்சன் வினோத்

சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீசாலை-ஐயா கடைச் சந்திப் பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று அதிகாலையில் வீட்டில் தனித்திருந்த மூதாட்டியைத் தாக்கி நகை மற்றும் பணம் ஆகியன கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

அதிகாலை 3 மணியளவில் வீட்டின் முன்பக்க கதவினை உடைத்து உள்நுழைந்து தனிமையில் இருந்த மூதாட்டியை கன்னத்தில் தாக்கி விட்டு வீட்டில் இருந்த பத்தரைப் பவுண் நகை மற்றும் ஒரு இலட்சத்து 13,000 ரூபாய் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றிருப்பதாக சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முகமூடி,கையுறை ஆகியன அணிந்து வந்த கொள்ளையன் ஒருவனே குறித்த துணிகர திருட்டில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .