Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Princiya Dixci / 2022 ஓகஸ்ட் 23 , மு.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்த வர்த்தகர்கள் மூவருக்கு எதிராக யாழ்.மாவட்ட பாவனையாளர் அதிகார சபையினரால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கோழி முட்டைகளுக்கான கட்டுப்பாட்டு விலை வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வெளியிடப்பட்டுள்ளது. அதில் வெள்ளை நிற முட்டை 43 ரூபாயும், பழுப்பு நிற முட்டை 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், முட்டைகளின் விலைகளை கட்டுப்பாட்டு விலைக்குள் விற்காது, அதிக விலைக்கு வர்த்தகர்கள் விற்பனை செய்வதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில், யாழ்ப்பாணம், திருநெல்வேலி மற்றும் கல்வியங்காடு போன்ற பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களில் யாழ். மாவட்ட பாவனையாளர் அதிகார சபையினர் நேற்று (22) திடீர் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
அதன்போது, அதிக விலைக்கு கோழி முட்டை விற்பனை செய்த மூன்று வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், எதிர்வரும் காலங்களில் வர்த்தக நிலையங்களில் திடீர் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என யாழ்.மாவட்ட பாவனையாளர் அதிகார சபையினர் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
24 Apr 2025