Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை
Janu / 2024 ஏப்ரல் 25 , பி.ப. 03:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
பருத்தித்துறை நகர சபையினரால் பருத்தித்துறை முதலாம் குறுக்குத்தெருவில் மீன் சந்தைக்கு அருகில் புதிய மரக்கறி சந்தைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு புதன்கிழமை (24) காலை 9:22 மணியளவில் சுப வேளையில் இடம் பெற்றுள்ளது.
சமய கிரியைகளை தொடர்ந்து பருத்தித்துறை நகர சபை வருமான வரி பிரிவு கிளைத் தலைவர் தி.சிவநேசன் மரக்கறி சந்தைக்கான அடிக்கல்லினை நாட்டிவைத்துள்ளார்.
51 மில்லியன் ரூபாய் பெறுமதியான குறித்த மரக்கறி சந்தை கட்டிடம் பருத்தித்துறை நகர சபையின் சொந்த நிதியில் அமைக்கப்படவுள்ளது.
இந்நிகழ்வில் பருத்தித்துறை நகர சபையின் நிர்வாக பொறுப்பு அதிகாரி, நிரஞ்சனி உமாகாந்தன் பிரதம பொது முகாமைத்துவ அதிகாரி கமலினி உதய சேகரன் உள்ளூராட்சி உதவியாளர் தாரணி மதியழகன் கணக்கு பதிவு அதிகாரி செபஸ்தியாம்பிள்ளை ராஜ்குமார் உட்பட பருத்தித்துறை நகரசபை அதிகாரிகள் நலன் விரும்பிகள் கலந்து சிறப்பித்துள்ளனர்.
எஸ்.தில்லைநாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
6 hours ago