2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

6 வயதுச் சிறுமி துஷ்பிரயோகம்; யாழில் முதியவர் கைது

Freelancer   / 2022 ஜூன் 27 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

செந்தூரன் பிரதீபன்

யாழ்ப்பாணம் - இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் 6 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 59 வயது முதியவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சிறுமியின் தாயார் நிகழ்வு ஒன்றுக்கு சென்றிருந்த வேளை, பக்கத்து வீட்டு முதியவர் சிறுமியை அறைக்குள் அழைத்துச் சென்று துஷ்பிரயோகம் செய்ததாக சிறுமி தாயிடம் தெரிவித்துள்ளார்.

தாயார் இந்த விடயம் தொடர்பில் இளவாலை பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட முதியவரை இன்றைய தினம் யாழ்ப்பாணம் சிறுவர் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

சிறுமி சட்ட வைத்திய பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .