2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

18 பேருக்கு எதிரான வழக்கு ஜூன் 14 வரை ஒத்திவைப்பு

Editorial   / 2023 பெப்ரவரி 22 , பி.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

18 பேருக்கு எதிரான வழக்கு  ஜூன் 14 வரை ஒத்திவைப்பு

நிதர்ஷன் வினோத்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 18 உறுப்பினர்களின் வழக்கு ஜூன் மாதம் 14 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த 11ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு எதிராக யாழ் நகரில் போராட்டம் நடத்திய பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் உள்ளிட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் 18 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் பதில் நீதவான் முன்னிலையில் அன்றிரவே ஆஜர்படுத்தப்பட்ட போது 18 பேரையும் பிணையில் விடுத்து யாழ்ப்பாண மேலநிக நீதவான் உத்தரவிட்டார்.

குறித்த வழக்கு விசாரணை இன்றையதினம் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற போது ஜூன் மாதம் 14 ஆம் திகதி வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .