Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை
Janu / 2024 மே 30 , மு.ப. 11:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணத்தில் 10 வயது மாணவிகளுடன் துர்நடத்தையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆசிரியருக்கு வடமாகாண கல்வி அமைச்சினால் பணித்தடை விதிக்கப்பட்டுள்ளது.
மானிப்பாய் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியர் ஒருவர் , தரம் 05 இல் கல்வி கற்கும் மாணவிகளுடன் தவறாக நடந்து கொண்டதாக பாதிக்கப்பட்ட மாணவி ஒருவரின் பெற்றோர்களால் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய, ஆசிரியர் கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளார் .
குறித்த ஆசிரியர் தற்போது பிணையில் விடுவிக்கபட்டுள்ள நிலையில் வழக்கு நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
மேலும் , சம்பவம் தொடர்பில் திணைக்களம் ஊடான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் , விசாரணை அறிக்கை கல்வி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் , ஆசிரியருக்கு தனது பணியினை தொடர தடை விதிக்கப்பட்டு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
எம்.றொசாந்த்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
2 hours ago
3 hours ago