2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 20ஆவது ஆண்டு நிறைவு விழா

Princiya Dixci   / 2016 ஏப்ரல் 21 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 20ஆவது ஆண்டு நிறைவு விழா, கொழும்பு விளையாட்டுத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் எதிர்வரும் 30ஆம் திகதி சனிக்கிழமை காலை 09 மணியளவில் நடைபெறவுள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன், இன்று வியாழக்கிழமை (21) தெரிவித்தார். 

இந்நிகழ்வின் போது சமூக மேம்பாட்டிற்காக உழைத்த மூவினத்தையும் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர்கள் கௌரவிக்கப்படவுள்ளதுடன், 20ஆவது ஆண்டு நிறைவு சிறப்பு மலர் மற்றும் அமைச்சுக்கள் அரச - தனியார் நிறுவனங்கள் - ஊடக நிறுவனங்கள் - ஊடகவியலாளர்களின் விவரங்கள் முதலானவற்றை உள்ளடக்கிய தகவல் திரட்டு என்பன வெளியிட்டு வைக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பிரதம அதிதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துகொள்ளவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .