2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

ஸ்ரீ சங்கர ஜெயந்தி ‘குருபூஜை நடத்த வேண்டும்’

Kogilavani   / 2017 ஏப்ரல் 26 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் உள்ள அனைத்து இந்துமத ஆலயங்களிலும், அறநெறிப் பாடசாலைகளிலும் ​“ஸ்ரீ சங்கர ஜெயந்தி குருபூஜையினை” நடத்த வேண்டுமென, சர்வதேச இந்துமத பீடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து இந்துமத பீடத்தின் தலைவர் சிவ​ஸ்ரீ. பால. ரவிசங்கர் சிவாச்சாரியார் கருத்துத் தெரிவிக்கையில்,

“இந்து மாமன்றங்களில் வருடந்தோரும் நடைபெறும் குருபூசை தினங்களில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியினையும் இணைத்து வருடந்தோரும் சித்திரை மாதம் நடாத்துவதற்கு, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களமும் அகில இலங்கை இந்து மாமன்றமும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

குறித்த குருபூசைக்கான ஸ்ரீ ஆதிசங்கரின் பிரேம் செய்யப்பட்ட படத்தினையும் ஸ்தோத்திரங்களையும்  075 - 7329716 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .