2025 ஏப்ரல் 06, ஞாயிற்றுக்கிழமை

வெளிநாட்டு பெண்ணுடன் 14 பேர் கைது

Editorial   / 2022 பெப்ரவரி 02 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், சட்டவிரோதமான முறையில் இரவு விடுதியொன்றை நடத்திச் சென்றார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், வெளிநாட்டு பெண்ணொருவரும், வெளிநாட்டவர்கள் 12 பேர் அடங்களாக 14 பேரும் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அனுமதிப்பத்திரமின்றி நடத்திச் செல்லப்பட்ட இந்த இரவு விடுதி, கொள்ளுப்பிட்டி பொலிஸாரினால் நேற்றிரவு சுற்றிவளைக்கப்பட்டது.

அந்த விடுதியில் இருந்து 489 மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டன. அதில்,  பியர் போத்தல்கள், ​வைன் போத்தல்கள் ஆறு,  உள்நாட்டு மதுபானம் ஒரு போத்தல் ஆகியனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த இரவு விடுதியை, வெளிநாட்டு பெண்​ணொருவர் நடத்திச் சென்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X