2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

வருடாந்த பொதுக் கூட்டமும் புதிய விடுதி திறப்பு விழாவும்

Editorial   / 2017 ஜூலை 03 , பி.ப. 02:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

பீ.எம். முக்தார்

பேருவளை, சீனன்கோட்டை இக்ரா தொழில்நுட்பக் கல்லூரி பழைய மாணவர் சங்க வருடாந்த பொதுக் கூட்டம், எதிர்வரும் 9ஆம் திகதி பிற்பகல் 1 மணி முதல் 2 மணி வரை, கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

கல்லூரியின் எதிர்கால வளர்ச்சிக்கு பழைய மாணவர்களின் பங்களிப்பு குறித்து இக்கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளது.

இந்த வருடாந்த பொதுக் கூட்டத்தில் மேற்படி கல்லூரியில் கல்வி கற்ற மாணவர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு, இக்ரா அலுமினி அஸோஸியேஷன் (Iqraa Alumni Association) தலைவர் அல்ஹாஜ் அஹ்ஸர் ஸவாஹிர் கேட்டுள்ளார்.

இதேவேளை, சீனன்கோட்டை இக்ரா தொழில்நுட்பக் கல்லூரிக்கு 65 இலட்சம் ரூபாய் செலவில் பணிப்பாளர் விடுதியொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

பி.யு.டி ஜெம்ஸின் பணிப்பாளரும் மேற்படிக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத் தலைவருமான  (2011-2017) அல்ஹாஜ் அஹ்ஸர் ஸவாஹிர், தனது சொந்த நிதியிலிருந்து இக்கட்டடத்தை நிர்மானித்து அன்பளிப்புச் செய்துள்ளார்.

இக்கட்டட திறப்பு விழாவும், எதிர்வரும் 9ஆம் திகதி மாலை 4 மணிக்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .